செய்திகள்
பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் 100 நாள் சாதனை

Published On 2019-09-03 09:49 GMT   |   Update On 2019-09-03 09:49 GMT
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்று 100 நாளில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜனதா அரசு பதவி ஏற்று வருகிற 7-ந்தேதி 100-வது நாளை நிறைவு செய்கிறது.

இந்த 100 நாளில் செய்த சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதற்காக முக்கிய மந்திரிகளிடம் தகவல்கள் கேட்டு பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் சாதனை மலர் தயாராகி வருகிறது.

இதில் காஷ்மீர் மாநிலத்துக்கு தனி அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஏ ரத்து செய்தது, முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆகியவை முக்கிய சாதனைகளாக இடம்பெறுகிறது.

மேலும் பொருளாதார வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், பல்வேறு துறைகள் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

மத்திய அரசின் 100-வது நாளான 7-ந்தேதிதான் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கி சாதனை படைக்கிறது. அன்றைய தினம் பிரதமர் மோடி பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இந்த வரலாற்று நிகழ்வை விஞ்ஞானிகள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கொண்டாடுகிறார்.
Tags:    

Similar News