இந்தியா
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 36,213 பேர் தற்கொலை
- குடும்பத்தலைவிகள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- தற்கொலை சம்பவங்களை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் சமீப காலமாக தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக குழந்தைகளை கொன்று விட்டு பெற்றோர் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவலின் படி கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தில் 36 ஆயிரத்து 213 பேர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதில் 21 ஆயிரத்து 476 பேர் ஆண்கள். 5 ஆயிரத்து 585 பேர் பெண்கள். 600 பேர் குழந்தைகள். குடும்ப பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்தவர்களே அதிகம் என்றும், இதில் 60 சதவீதம் பேர் குடும்பத்தலைவிகள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தற்கொலை சம்பவங்களை தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்க ஆய்வுக்குழு நியமிக்கப்பட வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.