இந்தியா

6 புதிய மசோதாக்கள் தாக்கல் ஆகிறது- மத்திய அரசு திட்டம்

Published On 2024-07-19 06:00 GMT   |   Update On 2024-07-19 06:00 GMT
  • சிவில் விமானத்துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் எனக்கூறபடுகிறது.
  • பாரதீய வாயுயான் விதேயக் மசோதா, தற்போதுள்ள விமான சட்டம் 1934-ல் திருத்தம் செய்யும் மசோதா ஆகும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 12-ந் தேதி நடைபெற உள்ளது. 23-ந் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டத்தொடரில், பேரிடர் மேலாண்மை சட்டத்தில் திருத்தம் செய்வது உள்பட 6 புதிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள மசோதா, பாரதீய வாயுயான் விதேயக் மசோதா உள்ளிட்ட 6 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.


இதில் பாரதீய வாயுயான் விதேயக் மசோதா, தற்போதுள்ள விமான சட்டம் 1934-ல் திருத்தம் செய்யும் மசோதா ஆகும். இது சிவில் விமானத்துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் எனக்கூறபடுகிறது.

இதே போல நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு மெட்ரோல் ரெயில் மற்றும் ஒரு லட்சம் எலக்ட்ரிக் இன்ட்ராசிட்டி பஸ்களை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் சேர்க்கப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், நாடு முழுவதும் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரெயில் சேவையை தொடங்க மத்தியஅரசு இலக்கு வைத்துள்ளது என்றார்.

Tags:    

Similar News