உலகம்

ஜப்பானை 155 முறை உலுக்கிய நிலநடுக்கங்கள்: பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

Published On 2024-01-02 02:40 GMT   |   Update On 2024-01-02 06:37 GMT
  • ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
  • பெரும்பாலனவை ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன.

ஜப்பானில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 பதிவானதால் கட்டடங்கள் குலுங்கின. சாலைகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது.

இருந்த போதிலும் நேற்றைய புத்தாண்டு தினத்தில் இருந்து இன்று வரை அதிர்ந்து கொண்டே இருந்ததாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 155 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலன நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் 3-க்கும் அதிகமாக பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் ஓரிரு நாட்களில் பயங்கர நிலநடுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதால் கடற்கரையோர பகுதிகளில் கவனமாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கம் குறித்து செல்போனில் எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் சுதாரித்துக் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றதால் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை.

இருந்த போதிலும் தற்போது வரை உயிரிழப்பு 30 ஆக உயர்ந்துள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழப்பும் அதிகம். சேதமும் அதிகரிப்பு என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News