இந்தியா
தெலுங்கானாவில் செம்மர மோசடி: அரசு அதிகாரிகள் 8 பேர் கைது
- செம்மரம் விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவு.
- அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் செம்மரம் மற்றும் மீன்பிடி விநியோகம் தொடர்பாக விசாரணை நடத்த முதல் மந்திரி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
இதில் தெலுங்கானா கால்நடை மேம்பாட்டு முகமை தலைமை நிர்வாக அதிகாரி சபாவத் ராம்சந்தர் மற்றும் அமைச்சர் ஒருவரின் உதவியாளராக இருந்த குண்டமராஜு கல்யாண்குமார் ஆகியோர் அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியது தெரியவந்தது. இருவரும் அரசு விதிகளை மீறி செம்மர கொள்முதலில் தனியார் நபர்களை ஈடுபடுத்தி அதன் மூலம் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 8 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.