இந்தியா

பாராளுமன்றம் 25-ந்தேதி கூடுகிறது- மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்

Published On 2024-11-19 06:39 GMT   |   Update On 2024-11-19 06:39 GMT
  • மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
  • இதனால் பல்வேறு விஷயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற 25-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிகள் கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு அழைப்பு விடுத்துள்ளார்.

வருகிற 24-ந்தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவும், தற்போது பாராளுமன்ற கூட்டுக்குழு ஆய்வில் உள்ள வக்பு வாரிய மசோதாவும் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 மசோதாக்களையும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகிறது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிந்த பிறகு இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதனால் பல்வேறு விஷயங்கள் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று கருதப்படுகிறது.

Tags:    

Similar News