இந்தியா

அனில் தேஷ்முக் மீது தாக்குதல்: மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைவு- சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Published On 2024-11-19 06:22 GMT   |   Update On 2024-11-19 06:22 GMT
  • தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை.
  • மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை மந்திரியும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் மீது நேற்றிரவு கடோல்-ஜலால்கேடா சாலையில் காரில் சென்றபோது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்கு உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியை சேர்ந்த சஞசய் ராவத் எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சஞ்சய் ராவத் கூறியதாவது:-

மகாராஷ்டிராவில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுபோன்ற வன்முறை இதற்கு முன்னதாக ஒருபோதும் நடந்தது இல்லை. தேவேந்திர பட்நாவிஸ் தற்போது உள்துறை மந்திரியாக உள்ளார்.

அவருடைய நகரில் முன்னாள் உள்துறை மந்திரியை கொல்ல சதி நடைபெற்றுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இதற்கு முதலில் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பேற்க வேண்டும். மகாராஷ்டிராவின் நிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. இந்த 2 வருடத்தில் மகாராஷ்டிராவின் சட்ட ஒழுங்கை தேவேந்திர பட்நாவிஸ் கெடுத்துவிட்டார். மும்பை தெருக்களில் பாபா சித்திக் போன்றோர் கொல்லப்பட்டதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

இந்த அடிப்படையில் முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தாக்கப்பட்டு, கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதற்கு பட்நாவிஸ், அவரே முன்வந்து பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News