யூடியூப் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய அல்லு அர்ஜுன் ரசிகர்கள்
- ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
- கடந்த தேர்தலின் போது தனது நெருங்கிய நண்பரான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பகிரங்கமாக ஆதரவு அளித்து இருந்தார்.
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் தனியார் யூடியூப் சேனல் அலுவலகம் உள்ளது. யூடியூப் சேனலில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு எதிராக சில படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்தனர்.
அதனால் ஆத்திரமடைந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் நேற்று யூடியூப் அலுவலகத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை சரமாரியாக அடித்து நொறுக்கினர்.
கடந்த தேர்தலின் போது தனது நெருங்கிய நண்பரான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு அல்லு அர்ஜுன் பகிரங்கமாக ஆதரவு அளித்து இருந்தார்.
ஜனசேனா கட்சி தலைவரும் அல்லு அர்ஜுனின் மாமாவுமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கூட்டணியில் இருக்கும்போது அல்லு அர்ஜுன் எதிர்தரப்பை சேர்ந்த வேட்பாளருக்கு ஆதரவு அளித்தது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் யூடியூப் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.