ஆயுள் முடிந்த செயற்கைகோள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது- நாளை விண்ணில் ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் புதுமையான முயற்சி
- ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
- விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை.
திருப்பதி:
பெங்களூரில் இயங்கி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி ஆயிரம் கிலோ எடை கொண்ட மேகா ட்ராபிக்ஸ்-1 எனும் எம்டி.ஐ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் மற்றும் பிரென்ச் ஆராய்ச்சி மையம் இணைந்து அனுப்பிய செயற்கைக்கோள் உலகளாவிய கால நிலை மாற்றங்களை சேகரித்து அனுப்புவதற்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.
இதனுடைய ஆயுட்காலம் 3 ஆண்டுகள் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர் இருப்பினும் தற்போது வரை 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த செயற்கைக்கோள் காலநிலை மாற்றங்களை உடனுக்குடன் அனுப்பி வருகிறது.
இந்த செயற்கைக்கோளில் உள்ள 125 கிலோ எரிபொருளை மக்கள் நடமாட்டம் இல்லாத பசிபிக் பெருங்கடலில் முழுமையாக வெளியேற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து மீண்டும் தரையிறங்கிய பிறகு அதில் சில நவீன தொழில்நுட்பங்களை புகுத்தி மீண்டும் விண்ணில் ஏவ விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏவப்படும் எம்டிஐ செயற்கைக்கோள் மீண்டும் 25 ஆண்டுகளுக்கு காலநிலை மாற்றங்கள் குறித்து விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு தகவல்களை அனுப்பும் என கூறப்படுகிறது.
அதன்படி நாளை மாலை 4-30 மணி முதல் 9-30 மணி வரை செயற்கைக்கோளை ஏவுவதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விண்ணில் ஏவப்பட்ட எந்த ஒரு செயற்கைக்கோள்களும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது இல்லை. முதல்முறையாக எம்.டி.ஐ. செயற்கைக்கோளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் புதிய முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.