இந்தியா
ஆந்திர மாநிலத்திற்கு 4 புதிய கும்கி யானைகள் கர்நாடகாவில் இருந்து வருகிறது
- கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன.
- தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஆந்திரா, கர்நாடக மாநில வனத்துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
கர்நாடகா வனத்துறை அமைச்சர் ஈஸ்வர.பி.காந்த்தே, ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது கர்நாடக மாநில வனத்துறை அமைச்சர் கூறுகையில்:-
கர்நாடகா வனத்துறையில் 35 முதல் 40 கும்கி யானைகள் உள்ளன. இதில் 18 யானைகள் தசரா விழாவில் பங்கேற்க உள்ளது. தசரா விழாவிற்கு பிறகு 4 கும்கி யானைகள் ஆந்திர மாநில வனத்துறைக்கு வழங்கப்படும் என்றார்.