கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பாதிப்பு
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்திருந்ததை தொடர்ந்து பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகின்றன.
டெங்கு, டைபாய்டு, எலி மற்றும் பன்றி காய்ச்சல்கள் மட்டு மின்றி வெஸ்ட் நைல், ஷிகல்லா, அமீபிக் மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட அரிய வகை காய்ச்சல்களும் , நிபா வைரஸ் உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்களும் பரவியது.
தேங்கிக்கிடக்கும் அசுத்தமான தண்ணீரில் குளிப்பதன் மூலம் அதில் உள்ள அமீபாக்கள், குளிப்பவரின் மூக்கு துவாரம் மற்றும் காதுமடல் வழியாக மூளைக்கு சென்று தாக்கு வதன் மூலம் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. கேரளாவில் அமீபிக் மூளைக்காய்ச்சல் சிறுவர்களை பாதித்து வருகிறது.
இந்த தொற்று பாதித்த மலப்புரத்தை சேர்ந்த 5 வயது சிறுமி, கண்ணூரை சேர்ந்த 13 வயது சிறுமி, கோழிக்கோட்டை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆகிய 3 பேர் கடந்த 2 மாத காலத்துக்குள் அடுத்தடுத்து இறந்தனர். இதனால் மாநிலத்தில் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது.
இந்நிலையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்த கோழிக்கோட்டை சேர்ந்த 14 வயது சிறுவன், 22 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தான்.
அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதித்தால் உயிர் தப்புவது மிகவும் அரிதானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோடு சிறுவன் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தான்.
இந்தநிலையில் கேரளாவில் மேலும் ஒரு சிறுவன் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக் கிறான். கடந்த 20-ந்தேதி உடல் நலம் பாதித்து கண்ணூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 4 வயது மதிக்கத்தக்க அந்த சிறுவ னுக்கு, அமீபிக் மூளைக் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து தீவிர சிகிச் சைக்காக கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டான்.
அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. சமீபத்தில் தளிபரம்பா அருகே உள்ள அருவியில் அந்த சிறுவன் குளித்திருக்கிறான். அப்போது அவனுக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல் தொற்று பரவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.