இந்தியா
கேரள மாநிலத்தில் அரசு வாகனங்களில் அலங்கார விளக்கு பொருத்த தடை
- அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
- ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் அமைச்சர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களில் அலங்கார விளக்குகள் பொருத்த மாநில அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த உத்தரவின்படி அரசு வாகனங்களில் நியான் விளக்குகள், பிளாஷ் விளக்குகள், பல வண்ண எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட விளக்குகளை பொருத்துவது சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசின் இந்த அறிவிப்பை மீறி பொருத்தியிருந்தால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவையடுத்து இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.