பெங்களூரில் 'வங்கதேச' பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை
- அவர் பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
- கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை
கர்நாடகாவில் வீட்டு வேலை செய்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள கல்கெரே ஏரிக்கு அருகே 28 வயது பெண்ணின் சடலம் நேற்று [வெள்ளிக்கிழமை] காலை கண்டெடுக்கப்பட்டது. அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்த குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் வங்கதேசத்தைச் சேர்த்தவர் என்று தெரிய வந்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக பெங்களூரில் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் அவர் வசித்து வந்தார். ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் அந்த பெண் வீட்டு வேலை செய்து வந்தார்.
வியாழன் மதியம் முதல் பெண் காணவில்லை என்றும், மாலை வரை காத்திருந்த கணவன் பின்னர் அவரை தேடிச் சென்றுள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் நேற்று காலை ஏரிக்கு அருகில் உள்ள மைதானத்தில் குடியரசு தின அணிவகுப்புக்கு ஒத்திகை பார்த்த சிலர் பெண்ணின் உடலை பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்றும் துப்பட்டாவால் அவரது கழுத்து நெறிக்கப்பட்டு பாரங்களால் உடல் சிதைப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவிதனர்.
மேலும் கல்லை சரியாக குற்றவாளியால் தூக்க முடியாததால் முகம் முழுவதுமாக சிதைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
பெண்ணுக்குத் தெரிந்த யாரோ ஒருவர்தான் குற்றவாளி என்று என போலீசார் சந்தேகிக்கின்றனர். பெண்ணின் பையில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு குற்றவாளி தப்பியதாகக் கூறப்படுகிறது.
பெண்ணின் கணவனுக்கு பாஸ்போர்ட் இருப்பதாகவும், அனால் அந்த பெண்ணுக்கு பாஸ்போர்ட் இல்லை என்றும் அவர் சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து வந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.