இந்தியா

பாத யாத்திரை திட்டத்தை அறிமுகப்படுத்திய திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ்

ராகுல்காந்தி பாத யாத்திரை லோகோ, தீம் இசை வெளியீடு

Published On 2022-08-23 10:38 GMT   |   Update On 2022-08-23 10:38 GMT
  • கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார்.
  • இணையதளம், லோகா, தீம் இசை மற்றும் துண்டு பிரசுரம் இன்று வெளியிடப்பட்டது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் காங்கிரசை வலுப்படுத்தவும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றவும் மிகப்பெரிய யாத்திரையை காங்கிரஸ் நடத்துகிறது.

கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பாத யாத்திரை செல்கிறார். வருகிற 7-ந்தேதி இந்த யாத்திரையை தொடங்குகிறார். 3,500 கிலோ மீட்டர் தூரம் 150 நாட்களுக்கு ராகுல்காந்தி பங்கேற்கும் பாத யாத்திரை நடக்கிறது.

இதற்கான இணையதளம், லோகா, முழக்கம், தீம் இசை மற்றும் துண்டு பிரசுரம் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பாத யாத்திரை தொடர்பான விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தினர்.

Tags:    

Similar News