அதிக மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கிய மார்டின் - எந்த கட்சிக்கு கொடுத்தார் தெரியுமா?
- தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது.
- யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகளவு தேர்தல் பத்திரங்களை வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இவர் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் ரூ. 509 கோடி மதிப்பிலான பத்திரங்களை தமிழ் நாட்டில் ஆளும் தி.மு.க. கட்சிக்கு வழங்கியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க. கட்சி ரூ. 656.8 கோடி பெற்று இருக்கிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு யார் வேண்டுமானாலும் பத்திரங்கள் வடிவில் நிதி வழங்க முடியும்.
இது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் எவ்வளவு நிதி பெற்றுள்ளது, அதனை யார் கொடுத்துள்ளார்கள் என்ற விவரங்கள் இடம்பெற்றுள்ளது.
அதன்படி பியூச்சர் கேமிங் நிறுவனம் ரூ. 1368 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதில் 37 சதவீதம் தொகையை பியூச்சர் கேமிங் நிறுவனம் தி.மு.க. கட்சிக்கு வழங்கி உள்ளது. பியூச்சர் கேமிங் மட்டுமின்றி மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 105 கோடியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் ரூ. 14 கோடியும், சன் டி.வி. ரூ. 100 கோடியும் வழங்கி உள்ளது.