இந்தியா

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 9 வீரர்கள் வீரமரணம்

Published On 2025-01-06 15:51 IST   |   Update On 2025-01-06 15:51:00 IST
  • ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்து தாக்குதல்.
  • 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் பகுதியில் நக்சலைட்டுகள் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ வாகனத்தை குறிவைத்து, ஐஇடி வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் 9 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

வேனில் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், வாகனத்தில் இருந்த 9 பேரும் சம்பவ இடத்திலேயே வீரமரணம் அடைந்தனர்.

நிலத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில் 8 ராணுவ வீரர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் என 9 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News