இந்தியா (National)

என்னதான் ஆச்சு.. ஒரே நாளில் 25 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-10-25 13:48 GMT   |   Update On 2024-10-25 13:48 GMT
  • இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது.
  • புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இண்டிகோ, விஸ்தாரா மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்களின் தலா 7 விமானங்கள் , 6 ஏர் இந்தியா விமானங்கள் உட்பட இன்றைய தினமும் 25 க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.

விமானங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்ட பின்னர் விமானங்கள் புறப்பட்டுச் செல்கின்றன. கடந்த 12 நாட்களில் இந்திய விமான நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் 275 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுள்ளது.

Tags:    

Similar News