இந்தியா
null

பிரியாணி, சமோசா சாப்பிட்ட சிறுவன்- 2 மாணவிகள் உயிரிழப்பு

Published On 2024-08-20 05:40 GMT   |   Update On 2024-08-20 06:00 GMT
  • விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.
  • பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அனகா பள்ளி மாவட்டம், அரட்ல கோட்டோவை சேர்ந்தவர் கிரண் குமார். கிறிஸ்தவ பாதிரியாரான இவர் கோடபு ரத்லா என்ற இடத்தில் கொட்டகை அமைத்து கிறிஸ்தவ ஆலயம் நடத்தி வருகிறார்.

பிரார்த்தனை நடந்து வரும் இடத்தில் பல்வேறு ஊர்களை சேர்ந்த ஏழை பழங்குடியின மாணவ-மாணவிகள் தங்கி பள்ளிக்கு செல்வதற்காக விடுதி நடத்தி வருகிறார். விடுதியில் 97 மாணவ, மாணவிகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு ஒருவர் தனது வீட்டு நிகழ்ச்சியில் மீதமான சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாக்களை விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு கொடுத்தனர். விடுதியில் உள்ள மாணவ மாணவிகள் சிக்கன் பிரியாணி மற்றும் சமோசாவை சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றனர்.

நள்ளிரவில் விடுதியில் தங்கி 1-ம் வகுப்பு படித்து வரும் ஜோஸ்வா (வயது 6) என்ற மாணவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பரிதாபமாக இறந்தார்.

விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவர்களுக்கும் வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாதிரியார் கிரண்குமார் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் அளித்தார். பெற்றோர்கள் விடுதிக்கு வந்து மாணவ-மாணவிகளை வீடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மாணவிகள் ஜென்மேலி பவானி (8), சத்தா(6) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

35 மாணவ- மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் பாதிரியார் கிரண் குமாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவ, மாணவிகளை மந்திரி வாங்கலடி அனிதா நேரில் சென்று ஆறுதல் கூறி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

விடுதியில் தங்கி இருந்து இறந்த மாணவ-மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் அனுமதி இல்லாமல் நடத்தப்படும் அனாதை இல்லங்கள், ஆதரவற்ற இல்லங்கள் உடனடியாக மூடப்படும் என அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News