தேர்தல் ஆணையர்களாக சுக்பிர் சந்து, ஞானேஷ் குமார் நியமனம்
- கடந்த மாதம் சந்திரா பாண்டே ஓய்வு பெற்றார்.
- கடந்த 9-ந்தேதி அருண் கோயல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கு பதவி காலியாக இருந்தது. இரண்டு ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிலையியில் பஞ்சாப் மாநிலத்தின் சுக்பிர் சந்து, கேரள மாநிலத்தின் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாலை வெளியாகலாம் எனத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த தகவலை தெரிவித்தள்ளார்.
தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பிடித்திருந்தனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.
சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் கடந்த 9-ந்தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.