இந்தியா

சன்னப்பட்டினம் இடைத்தேர்தல்: தேவகவுடா மகள் அனசுயா மஞ்சுநாத் போட்டி?

Published On 2024-07-04 05:07 GMT   |   Update On 2024-07-04 05:07 GMT
  • சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
  • மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் சன்னப்பட்டினம் தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியானார்.

இதையடுத்து சன்னப்பட்டினம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. எனவே இந்த தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து இந்த தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகளும், பெங்களூரு ஊரக தொகுதி எம்.பி. டாக்டர் சி.என். மஞ்சுநாத்தின் மனைவியுமான அனசுயா போட்டியிடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் அவர் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார். மேலும் பிரசாரத்தின் போது அவர் வகுத்த வியூகம் ஆகியவை வெற்றிக்கு கை கொடுத்தது. இதையடுத்து அனசுயா வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News