இந்தியா

மிகவும் தாமதமான மன்னிப்பு... சிதம்பரத்துக்கு கண்டனம் தெரிவித்த பிஆர்எஸ்

Published On 2023-11-17 06:51 GMT   |   Update On 2023-11-17 06:51 GMT
  • தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.
  • 1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

திருப்பதி:

ஐதராபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது தெலுங்கானா போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்டார்.

மேலும் சந்திரசேகர ராவ் வரலாற்று மாணவர் அல்ல. ஆந்திர பிரதேசத்தின் பெரும்பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐதராபாத் மாநிலம் இருந்தது.

தெலுங்கு பேசும் மாநிலத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய இயக்கம் அப்போது இருந்தது. அப்படித்தான் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே ஆந்திர பிரதேசம் உருவாக்கப்பட்டது.

ஒரு மாநிலத்தை உருவாக்குவது அல்லது ஒரு மாநிலத்தை பிரிப்பது குழந்தைகளின் விளையாட்டு அல்ல என கூறினார்.

இதுகுறித்து பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமராவ் கூறியிருப்பதாவது:-

மிகவும் தாமதம் சிதம்பரம் ஜி. தெலுங்கானா மக்களுக்கு காங்கிரஸ் இழைத்த கொடுமைகளை எப்போதும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

1952 முதல் 2014 வரை நூற்றுக்கணக்கான தெலுங்கானா இளைஞர்களின் உயிரைப் பறித்ததற்கு உங்கள் கட்சி மட்டுமே காரணம்.

இப்போது, நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், தெலுங்கானா மக்கள் காங்கிரஸ் எங்கள் மீது செய்த அட்டூழியங்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள். மறக்க மாட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News