இந்தியா

அருணாச்சல பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு: சீன எல்லைப்பகுதி சாலைகள் துண்டிப்பு

Published On 2024-04-25 08:42 GMT   |   Update On 2024-04-25 08:42 GMT
  • மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன.
  • சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இட்டாநகர்:

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சீன எல்லையையொட்டி உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையையொட்டி உள்ள திபாங் பள்ளத்தாக்கை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 33-ல் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

மலையில் இருந்து மழைநீர் அருவி போல் கொட்டியதில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் பாறை மற்றும் மணல்கள் விழுந்தன. மேலும் அந்த சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு துண்டானது. இதனால் ஹுன்லி-அனினி இடையே போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

சீன எல்லையில் ராணுவ முகாம்களுக்கு செல்லக்கூடிய சாலை கடும் சேதமடைந்துள்ளதால் அங்கு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க மூன்று நாட்கள் ஆகும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தற்போது வானிலை மோசமாக இருப்பதால் சீரமைப்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் தற்போது உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News