கர்நாடகாவில் நடுக்கடலில் படகில் தத்தளித்த கோவா மீனவர்கள் 27 பேர் மீட்பு
- கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.
- கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர்.
பெங்களூரு:
கோவா மாநிலம் பனாஜியில் கிறிஸ்டோரே என்ற மீன்பிடி படகில் 27 மீனவர்கள் அரபிக்கடலின் நடுப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக திடீரென என்ஜின் கோளாறு ஏற்பட்டு படகு வழி தவறியது. இந்த படகில் இருந்த மீனவர்கள் தங்களை காப்பாற்றுமாறு கடலோர காவல்படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர்களுடைய படகு எந்த பகுதியில் உள்ளது? என ஆய்வு செய்தபோது கர்நாடக மாநிலம் உத்தர கன்னட மாவட்டம் கார்வார் அருகே அங்கோலாவில் உள்ள பெலிகேரி துறைமுகத்திலிருந்து 30 கடல் மைல் தொலைவில் படகு தத்தளிப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கடலோர காவல்படையினர் நடுக்கடலில் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு படகை கண்டுபிடித்தனர்.
கடலோர காவல்படையினர் சரியான நேரத்தில் அங்கு வந்ததால் 27 மீனவர்களும் நிம்மதி அடைந்தனர். இதையடுத்து படகில் இருந்த 27 மீனவர்களும் பத்திரமாக மீட்டு அவர்களை மீட்டு பாதுகாப்பாக பெலிகேரி துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர்.