இந்தியா

ஆப்கானிஸ்தானில் உள்ள அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?- பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

Published On 2025-01-06 15:31 IST   |   Update On 2025-01-06 15:31:00 IST
  • அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கண்டனத்திற்குரியது.
  • உள்ளாநட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் கடந்த மாதம் இறுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவார்கள்.

இது தொடர்பாக மீடியாக்கள் எழுப்பிய கேள்விற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் கண்டனத்திற்குரியது. உள்ளாநட்டு தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம்" எனத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் போர் விமானம் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான பக்திகா மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 46 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவார்கள்.

பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என ஆப்கானிஸ்தான் கூறிய நிலையில், பாகிஸ்தானில் உள்ள பகுதிகள் மீது தாக்குதலும் நடத்தியது.

Tags:    

Similar News