null
காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்.எல்.ஏ
- தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்தது.
- முதல்வர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸுக்கு மாறிய 6வது பிஆர்எஸ் எம்எல்ஏ செவெல்லா காலே யாதய்யா ஆவார். தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 64 இடங்களை கைபற்றி ஆட்சியை பிடித்தது. அதில் பிஆர்எஸ் கட்சி 39 இடங்களை மட்டுமே வென்று தோல்வி அடைந்தது.
இந்நிலையில் தெலுங்கானா காங்கிரஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில், அதன் எம்.எல்.ஏ.வான செவெல்லா காலே யாதய்யா இன்று ஆளும் காங்கிரஸில் இணைந்தார். அவருக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சால்வை அணிவித்தார். அவருடன் தெலுங்கானா கட்சி விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் தீபா தாஸ்முன்சி மற்றும் பிற தலைவர்கள் முன்னிலையில் யாதய்யா ஆளும் கட்சியில் இணைந்தார் என்று தெலுங்கானா காங்கிரஸ் தெரிவித்துள்ளது.