அரிசி ஆலை உரிமையாளர்களிடம் காங்கிரஸ் ரூ.100 கோடி தேர்தல் நிதி வசூல்- பா.ஜ.க. குற்றச்சாட்டு
- அரிசி ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு 10 முதல் 12 கிலோ வரை நெல் சேகரிக்க அனுமதித்துள்ளனர்.
- சட்டவிரோதமாக நெல் விற்பனை செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கை மாறியுள்ளது.
திருப்பதி:
அரிசி ஆலையாளர்களிடம் இருந்து வசூலான ரூ.100 கோடியை தேர்தல் நிதியாக காங்கிரஸ் மேலிடத்திற்கு வழங்கியதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி உள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா மாநில பா.ஜ.க. சட்டமன்ற தலைவர் மகேஷ்வர் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா மாநில காங்கிரஸ் சட்டவிரோத நெல் கொள்முதலுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நெல் ரூ.1600 கோடிக்கு ரசீது இல்லாமல் விற்கப்பட்டது.
அரிசி ஆலை உரிமையாளர்களிடம் காங்கிரஸ் கட்சி மந்திரி உத்தம் குமார் ரெட்டி மற்றும் சிவில் சப்ளை துறை அதிகாரிகள் ரூ.500 கோடி பெற்றனர். அதில் ரூ.100 கோடியை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுக்கு தேர்தல் நிதியாக உத்தம் குமார் ரெட்டி சமீபத்தில் கொடுத்தார்.
"உத்தம்குமார் ரெட்டி முதல் மந்திரி பதவிக்கான பந்தயத்தில் இருக்கிறார், கட்சி மேலிடத்தை மகிழ்விப்பதற்காக, தேர்தலுக்கு 100 கோடி ரூபாய் அனுப்பினார்.
அரிசி ஆலைகள் விவசாயிகளிடம் இருந்து குவிண்டால் ஒன்றுக்கு 10 முதல் 12 கிலோ வரை நெல் சேகரிக்க அனுமதித்துள்ளனர்.
சட்டவிரோதமாக நெல் விற்பனை செய்ததன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கை மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டு தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.