கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி
- அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பாராளுமன்ற எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார்.
- பிரியங்கா காந்திக்கு அவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
வயநாடு மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று அண்ணன் ராகுல் காந்தியிடம் காண்பித்து பிரியங்கா காந்தி மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில், இன்று கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து பாராளுமன்ற மக்களவையில் எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் காந்தி குடும்பத்தில் இருந்து மற்றொரு நபராக பாராளுமன்றம் அவையை அலங்கரிக்கிறார்.
பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்திக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப்பிரமானம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பாராளுமன்ற எம்பியாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு அவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.