வணிகம் & தங்கம் விலை

சட்டென 700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்

Published On 2024-11-28 06:48 GMT   |   Update On 2024-11-28 06:48 GMT
  • மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது.
  • 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79, 450 புள்ளிகளில் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் இன்று காலை 9.15 மணிக்கு சென்செக்ஸ் 80.239.08 புள்ளிகளுடன் தொடங்கியது. நேற்று 80281.64 புள்ளிகளுடன் நிறைவடைந்த வர்த்தகம் இன்று காலை சென்செக்ஸ் 72.56 புள்ளிகள் உயர்ந்து தொடங்கியது.

அதன்பின் சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. காலை 10.30 மணியளவில் சட்டென சென்செக்ஸ் புள்ளிகள் சரிய ஆரம்பித்தது. 15 நிமிடத்திற்குள் சுமார் சென்செக்ஸ் புள்ளிகள் 700 சரிந்து வர்த்தகம் ஆனது.

தற்போது 12.05 மணியளவில் 780 புள்ளிகள் சரிந்து 79450 புள்ளிகளில் வர்த்தகமானது.

அதேபோல் இந்திய பங்குச் சந்தை நிஃப்டி இன்று 210 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. நேற்று 24274.90 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. இன்று காலை 24274.15 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது, தற்போது. 24070 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Similar News