இந்தியா

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.பி. வீடு முன் பாஜக போராட்டம்

Published On 2024-02-04 10:27 GMT   |   Update On 2024-02-04 10:27 GMT
  • காங்கிரஸ் எம்.பி டி.கே சுரேஷ் இல்லம் முன் சாலையில் பாஜகவினர் இன்று ஏராளமானோர் திரண்டனர்.
  • போலீசார் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றினர்.

பெங்களூருவில் காங்கிரஸ் எம்.பி. டி.கே சுரேஷின் "தனி நாடு" என்ற கருத்தைக் கண்டித்து அவரது இல்லத்திற்கு முன்பாக பாஜக யுவமோர்ச்சா அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

சதாசிவ நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே, 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜே', 'டவுன் டி.கே. சுரேஷ்' போன்ற முழக்கங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.

நிதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள அநீதியை மத்திய அரசு சரி செய்யாவிட்டால், தென் மாநிலங்கள் 'தனிநாடு' கோரும் நிலைக்குத் தள்ளப்படும் என்று சமீபத்தில் அவர் கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி டி.கே சுரேஷ் இல்லம் முன் சாலையில் பாஜகவினர் இன்று ஏராளமானோர் திரண்டனர்.

அவரது இல்லம் முன் உள்ள சாலையில் அமர்ந்து பாஜக வினர் 'வந்தே மாதரம்', 'பாரத் மாதா கி ஜே', 'டவுன் டி.கே. சுரேஷ்' என முழக்கங்கள் எழுப்பினர். அதைதொடர்ந்து போராட்டக்காரர்களை போலீசார் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு முன் பாஜக யுவமோர்ச்சா தொண்டர்கள் நடத்திய போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கூறுகையில், "ஜனநாயகத்தில் போராட்டம் நடத்தவும் பேசவும் அனைவருக்கும் உரிமை உள்ளது.

அவர்களை யாராலும் தடுக்க முடியாது. எனது அறிக்கையை பாஜக திரித்து வருகிறது. நாடு பிளவுபட வேண்டும் என்று நான் அவ்வாறு ஒருபோதும் கூறவில்லை. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கட்டும்.

கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். எனது அறிக்கை தெளிவாக உள்ளது. பாஜக தலைவர்கள் எனது அறிக்கையை திரிக்க முயற்சிக்கிறார்கள்.

பாஜகவுக்கு நான முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை" என்றார்.

Tags:    

Similar News