இந்தியா
மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் கே.சி.ஆர்: காங்கிரஸ் கடும் தாக்கு
- தெலுங்கானாவில் வரும் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
- பிஆர்எஸ், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது.
தெலுங்கானாவில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
இந்நிலையில், முதல் மந்திரி கே.சி.ஆர். மக்களைச் சந்திக்காமல் பண்ணை வீட்டில் முடிவுகளை எடுக்கிறார் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசுகையில், இது முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம். நீங்கள் விரும்பிய வளர்ச்சி நடக்கவில்லை. சாலை சரியில்லை, பாசனமும் நடக்கவில்லை. ஆனால், கே.சி.ஆர். கவலைப்படவில்லை. அவர் தனது பண்ணை வீட்டில் அமர்ந்து அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார், மக்களைச் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.