ஆம் ஆத்மி மீது கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள்: சுகேஷ் சந்திரசேகர்
- குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் வெளியானது.
புதுடெல்லி :
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், தனது சமீபத்திய கடிதத்தில், டெல்லியின் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அது உண்மை இல்லை என்றால், தனது முந்தைய புகாரை வாபஸ் பெறுமாறு சிறை நிர்வாகம் ஏன் என்னை வற்புறுத்துகிறது எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
அவர் நேற்று வெளியிட்ட மற்றொரு கடிதத்தில், ஆம் ஆத்மி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் பொய்யானால் என்னை தூக்கிலிடுங்கள். அதேநேரம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்காவிட்டால் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த கடிதம் அவரது வக்கீல் மூலம் நேற்று வெளியானது. அதில், 'நான் அமைதியாக இருந்தேன், எல்லாவற்றையும் புறக்கணித்தேன். ஆனால் உங்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் சிறை நிர்வாகம், மந்திரி சத்யேந்தர் ஜெயின் ஆகியோரது அச்சுறுத்தல்கள் என்னை திருப்பிவிட்டிருக்கின்றன' என்று சுரேஷ் சந்திரசேகர் கூறியுள்ளார்.
தனது முந்தைய புகாரில் உண்மை இல்லை என்றால், சிறை நிர்வாகம் தன்னை ஏன் வற்புறுத்துகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.