இந்தியா
null

சத்தீஸ்கரில் 30 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர்

Published On 2024-06-15 09:59 GMT   |   Update On 2024-06-15 10:00 GMT
  • குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் நாராயணபூர் மாவட்டம் அடுஜ்மத் வனப்பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படை வீரர்களும், 4 மாவட்ட போலீசாரும் இணைந்து நக்சல்வேட்டையில் ஈடுபட்டனர்.

நக்சலைட்டுகளும், பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 8 நக்சலைட்டுகள் குண்டு பாய்ந்து பலியானார்கள்.


இந்த என்கவுண்டரில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் காயம் அடைந்தனர்.

இதைதொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் பாதுகாப்பு படையினரால் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

30 கிலோ வெடிபொருட்கள் கொண்ட தொடர் IED வெடிகுண்டு மற்றும் 1 குக்கர் வெடிகுண்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்புக் குழுக்கள் வெடிபொருட்கள் மற்றும் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர்.





Tags:    

Similar News