இந்தியா

ஆந்திராவில் களை எடுக்கும் போது விவசாய நிலத்தில் கிடைத்த வைர கற்கள்- லட்சாதிபதியான பெண் கூலி தொழிலாளி

Published On 2023-07-17 04:12 GMT   |   Update On 2023-07-17 08:38 GMT
  • ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஓங்கோலை சேர்ந்த பெண் ஒருவர் துக்கிலி மண்டலம் ஜென்னகிரி விவசாய நிலத்தில் களை எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது தேன் நிறத்திலான கல் ஒன்று கிடைத்தது. அதை எடுத்த பெண் அங்குள்ள நகை கடைக்கு சென்று பரிசோதித்தார். அப்போது வைரக்கல் என தெரிய வந்தது.

வயல் வெளியில் கிடைத்த வைரத்தை நகை வியாபாரி ரூ.25 லட்சத்திற்கு வாங்கினார். வயல்வெளியில் வைரம் கிடைத்த தகவல் அந்த ஊர் முழுவதும் பரவியது. இதனால் ஆண்கள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு வயல்களில் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஊர் மக்கள் அனைவரும் போட்டி போட்டு வயலில் வைரத்தை தேடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஊர் மக்கள் அனைவரும் வயல்வெளியில் வைரத்தை தேடியதால் கிராமத்தில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த தகவல் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவியது.

இந்நிலையில் பக்கத்து ஊரான மத நாதபுரத்தை சேர்ந்த விவசாயி தனது குடும்பத்தினருடன் அவரது வயல்வெளியில் வைரத்தை தேடினார். அவருக்கு 2 வைரக்கல் கிடைத்தது. தொடர்ந்து பொதுமக்கள் வைரத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News