மத்திய அரசின் விளம்பரங்களுக்கு மட்டும் இத்தனை கோடி செலவா? ஆர்டிஐ-ல் அதிர்ச்சி தகவல்
- கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்து வெளியிடப்பட்டுள்ளது.
- எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல், மக்களை ஏமாற்றி, திசைதிருப்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும், பிரதமர் மோடி விளம்பரத்திற்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்வதாகவும் காங்கிரஸ் கட்சி முன்னதாக குற்றம்சாட்டியது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளில் செய்துள்ள விளம்பரத்திற்கான செலவு குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில் (2014- 2024) மோடி அரசு தொலைக்காட்சி விளம்பரங்களுக்காக ரூ.2,974 கோடி செலவிட்டு உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தொலைக்காட்சியை தவிர, எஸ்.எம்.எஸ், டிஜிட்டல் விளம்பரங்களுக்கு ரூ.667 கோடி செலவிட்டுள்ளது.
இதற்கிடையே, பத்திரிகை விளம்பரங்கள், பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள், போஸ்டர் விளம்பரம், ரெயில்வே டிக்கெட் உள்ளிட்ட விளம்பரங்களுக்கு பாஜக அரசு செலவிட்ட தொகை விவரம் வெளியாகவில்லை.