இந்தியா

முதல் முயற்சியிலேயே ஜாக்பாட்: யார் இந்த பஜன்லால் சர்மா?

Published On 2023-12-12 11:53 GMT   |   Update On 2023-12-12 11:53 GMT
  • ராஜஸ்தான் முதல் மந்திரியாக பஜன்லால் சர்மா இன்று தேர்வு செய்யப்பட்டார்.
  • அவருக்கு பா.ஜ.க. தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 115 தொகுதிகளைக் கைப்பற்றி பெரும்பான்மையுடன் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி தோல்வி அடைந்தது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் அசோக் கெலாட் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, ராஜஸ்தானில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பஜன்லால் சர்மாவை ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துணை முதல் மந்திரிகளாக தியா சிங் மற்றும் பிரேம் சந்த் பெய்வா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சபாநாயகராக வசுதேவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் முறையாக சாங்கனேர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ.வான பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு ராஜ்நாத் சிங், வசுந்தரா ராஜே உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News