உலகம் (World)

குப்பைகளை சேகரித்து ரூ.56 லட்சம் சம்பாதித்த வாலிபர்

Published On 2024-07-12 07:20 GMT   |   Update On 2024-07-12 10:39 GMT
  • பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.
  • பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம்.

வேண்டாம் என்று தூக்கி வீசப்பட்ட குப்பை குவியல்களில் இருந்து பொருட்களை சேகரித்து அவற்றை பணமாக்கி ரூ.56 லட்சம் சம்பாதித்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

சிட்னியை சேர்ந்தவர் லியோனார்டோ அர்பானோ. 30 வயதான இவர் சிட்னியின் தெருக்களில் தூக்கி வீசப்பட்ட குப்பைகளை தேடி செல்கிறார். அங்கு உள்ளூர் நிர்வாகம் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை அகற்றும் சேவைகளை பொது மக்களுக்கு வழங்குகிறது. அப்பகுதியில் குடியிருப்பவர்கள் பர்னிச்சர்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பொருட்களை தங்களுக்கு வேண்டாம் என்றால் வெளியே வீசிவிடுகின்றனர். அதுபோன்ற பொருட்களை குப்பைகளில் இருந்து சேகரித்த லியோனார்டோ அர்பானோ, அவற்றை சிறிது பழுது நீக்கி ஆன்-லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார்.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.56 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. இவர் பெரிய மற்றும் கனமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுக்க மாட்டாராம். அவற்றை கையாள்வது அல்லது எடுத்து செல்வது கடினமாக இருக்கும் என்பதால் அவற்றை எடுக்க மாட்டேன் என அர்பானோ கூறுகிறார். இவ்வாறு கிடைக்கும் பணத்தை தனது வீட்டு வாடகை செலுத்த பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News