இந்தியா

10 ஆம் வகுப்பு ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம்.. கோவிலில் சாமி சிலையை உடைத்த மாணவன்

Published On 2024-11-18 05:13 GMT   |   Update On 2024-11-18 05:13 GMT
  • திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி சிலையை மாணவன் உடைத்தான்
  • சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து இரண்டு போலீசார் மஃப்டி உடையில் சென்றனர்

கர்நாடக தலைநகர் பெங்களூரில் 10 ஆம் வகுப்பு  தேர்வில் ஃபெயில் ஆனதற்கு கடவுள் தான் காரணம் என்று மாணவன் சாமி சிலையை உடைந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

பெங்களூரின் கிழக்கு பகுதியில் உள்ள திப்பசந்திராவில் கோவிலில் இருந்த புவனேஸ்வரி கடவுள் சிலையை உடைத்தாக 17 வயது சிறுவன் மீது போலீசார் சிறார் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவம் குறித்து பேசிய போலீஸ், 10 ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி பரீட்சையில் மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்ததால் அடைந்த சிறுவன் விரக்தியில் இருந்துள்ளான், தனது தோல்விக்கு கடவுள் தான் காரணம் என்று கருதிய சிறுவன் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள புவனேஸ்வரி சிலையைக் கீழே தள்ளி உடைத்துள்ளான்.

 

சிலை உடைந்து கிடப்பதை கோவில் பூசாரி சில மணி நேரங்கள் கழித்து கவனித்துள்ளார். எனவே போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் சிறுவன் ஒருவன் சிலையை உடைத்ததை கண்டறிந்தனர்.

சிறுவனின் வீட்டை கண்டுபிடித்து மஃப்டி உடையில் சென்ற இரண்டு போலீசார் சிறுவனை கஸ்டடியில் எடுத்து சிறார் நீதி மையத்தில் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News