இந்தியா
மணிப்பூர் வன்முறை எதிரொலி: படுகொலை உள்ளிட்ட மூன்று வழக்குகள் என்.ஐ.ஏ.-க்கு மாற்றம்
- மணிப்பூரில் பெண்கள் உள்பட 6 பேர் கடத்தி செல்லப்பட்டு படுகொலை.
- மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு தீ வைப்பு, வன்முறை பரவல்.
மணிப்பூர் மாநிலத்தின் ஜிர்பாம் மாவட்டத்தின் போரோபெக்ரா பகுதியில் கடந்த வாரம் இரண்டு முதியவர்கள் கொலை செய்யப்பட்டதுடன் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆறு பேர் கடத்தி செல்லப்பட்டனர். அவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனால் மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ளது. அம்மாநில மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் படுகொலை மற்றும் பொது ஒழுங்கு சீர்குலைவு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளை என்.ஐ.ஏ. எடுத்துக் கொண்டது. உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி மணிப்பூர் போலீசாரிடம் இருந்து இந்த வழக்குகளை என்.ஐ.ஏ. எடுத்துக் கொண்டது.
என்.ஐ.ஏ. இது தொடர்பாக விசாரணை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.