இந்தியா (National)

பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்- ராகுல்காந்தி

Published On 2024-07-16 07:08 GMT   |   Update On 2024-07-16 07:08 GMT
  • பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது.
  • மீண்டும் மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ அதிகாரி ஒருவர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒரு ராணுவ வீரர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

காஷ்மீரில் நடந்த மற்றொரு பயங்கரவாத தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெறுவது மிகுந்த வருத்தமும், கவலையும் அளிக்கிறது. இந்த தொடர் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீரின் மோசமான நிலையை வெளிப்படுத்துகின்றன.

நமது ராணுவ வீரர்களும். அவர்களின் குடும்பங்களும் பா.ஜனதாவின் தவறான கொள்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் மீண்டும் நடக்கும் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும்.

நாட்டுக்கும், ராணுவ வீரர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியனின் கோரிக்கையாக உள்ளது. இந்த துயரமான நேரத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நிற்கிறது.

இவ்வாறு ராகுல் காந்தி அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News