இந்தியா

குஜராத் சட்டசபை தேர்தல்

இரண்டாம் கட்ட தேர்தல் - குஜராத்தில் 61 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2022-12-05 19:39 GMT   |   Update On 2022-12-05 19:39 GMT
  • குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.
  • குஜராத் மாநிலத்தில் 93 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது.

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் கடந்த 1-ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது.

காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு, நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது.

காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 19.17 சதவீதமாகவும், மதியம் 1 மணி நிலவரப்படி 34.74 சதவீதமாகவும் பதிவாகியிருந்தன. மாலை 3 மணி நிலவரப்படி 50.51 சதவீதமாகவும், 5 மணி நிலவரப்படி 58 சதவீதமாகவும் வாக்குகள் பதிவாகியிருந்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

மாலை 5 மணிக்கு முன்பாக வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வாக்களிக்க கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், குஜராத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற தேர்தலில் 61 சதவீதம் வாக்குகள் பதிவாகின என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 8-ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News