இந்தியா
சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது படுவேகத்தில் மோதிய கார்.. அதிர்ச்சி வீடியோ
- இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள்.
- படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானா மாநிலத்தின் கைதல் நகரின் மார்க்கெட் அருகில் சாலையோரம் அமர்ந்திருந்த 5 பேர் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் ஒருவர் கார் ஓட்ட கற்றுக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் காரை நிறுத்துவதற்கு பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அவர் தவறுதலாக அழுத்தியுள்ளார். இதனால் வேகமாக ஓடிய கார் சாலையோரம் சேர் போட்டு உட்கார்ந்திருந்த 5 பேர் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் 3 பேர் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்கள். படுகாயமடைந்த மீதி 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.