null
- மத்திய வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. வயநாட்டில் பெய்த கனமழை காரணமாக கடந்தமாதம் நிலச்சரிவு ஏற்பட்டு 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
புயல் சின்னம் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் லட்சத்தீவில் உருவான சூறாவளி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக மத்திய வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது. இதனால் கண்ணூர் மற்றும் காசர் கோடு மாவட்டங்களுக்கு நாளை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி பலத்த காற்று காரணமாக கேரள கடற்கரையோரங்களில் கடல் சீற்றம் மற்றும் பலத்த அலைகள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இதனால கடலோர கிராம மக்கள் கவனமுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.