இந்தியா

தனி அறையில் படுக்க சொன்ன மனைவி.. மன உளைச்சலில் இருந்த கணவனுக்கு உயர்நீதிமன்றம் விவாகரத்து!

Published On 2024-08-31 21:21 IST   |   Update On 2024-08-31 21:21:00 IST
  • உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறா
  • சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று, மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது

மனைவி தன்னை தனி அறையில் தூங்க சொன்னதால் மன அழுத்தத்திலிருந்த கணவனுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது. தனது இரண்டாவது மனைவியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வழங்குமாறு லக்னோ குடும்ப நீதிமன்றத்தை நாடினார். அங்கு தீர்வு கிடைக்காத நிலையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அவரது மனுவில், திருமணமான 4- 5 மாதங்களுக்கு தன்னுடன் இணக்கமாக இருந்த மனைவி அதன்பின் தன்னை மிரட்டி மன ரீதியாக துன்புறுத்துகிறார், உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து உடைக்கவும் செய்கிறார், எல்லாவற்றிற்கும் மேலாக தன்னை தனியறையில் தூங்க வற்புறுத்துகிறார் என்று கணவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது அறைக்குள் நுழைந்தால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் அதற்கு எனது குடும்பம் தான் காரணம் என்று எழுதி வைப்பேன் என்றும் மனைவி மிரட்டுவதாவும் அவர் அந்த மனுவில் தெரிவித்தார்.

 

இந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுபாஷ் வித்யார்த்தி, சேர்ந்து இருப்பது என்பது திருமண உறவில் முக்கியமான ஒன்று என்றும், மனைவி அதை மறுப்பது, மணவாழ்க்கைக்கு எதிரானது என்றும் இதனால் கணவன் உடல் ரீதியாகவும், மன ரீதியாவும் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க உத்தரவிட்டுள்ளார். 

Tags:    

Similar News