இந்தியா

14 பேர் பலியான ரெயில் விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை- ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்

Published On 2023-10-31 04:48 GMT   |   Update On 2023-10-31 04:48 GMT
  • ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் 2 ரெயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து நடந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றன.

ரெயில் விபத்திற்கு மனித தவறே காரணம் என தெரியவந்துள்ளது. இது குறித்து ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயில் விபத்து குறித்து விரிவான உயர்மட்ட குழு விசாரணை நடத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் அலர்ட் சிஸ்டம் ஏன் செயல்படவில்லை, சிக்னலில்லிங் ஏன் தோல்வியடைந்தது.

தகவல் தொடர்பு அமைப்பு எவ்வாறு தோல்வியடைந்தது என்று கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து அம்சங்களையும் முழுமையாக ஆய்வு செய்ய உயர்மட்ட தணிக்கைக் குழுவை அமைக்க வேண்டும்.

விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தனது ஆதரவு, பிரார்த்தனைகளும் இருக்கும் காயமடைந்தவர்களுக்கு ஆந்திர அரசு தொடர்ந்து சிறந்த சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News