இந்தியா

கண்ணூரில் போலீஸ் வாகனம் மீது ஐஸ்கிரீம் குண்டுகள் வீச்சு

Published On 2024-05-14 05:05 GMT   |   Update On 2024-05-14 05:05 GMT
  • வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.
  • போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாவோடு அருகே உள்ள சக்கரக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இருந்தபோதிலும் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.

ஆனால் போலீஸ் வாகனத்துக்கு அருகில் விழுந்து குண்டுகள் வெடித்தன. இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் சோதனை செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.

அப்போது போலீஸ் வாகனம் மீது வீசப்பட்டது ஐஸ்கிரீம் குண்டுகள் என்பது தெரியவந்தது. போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News