இந்தியாவின் GDP-யில் நிறைய முரண்பாடுகள் இருக்கு - பகீர் கிளப்பிய ஏசியன் பெயிண்ட்ஸ் சி.இ.ஒ.
- ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை.
உலகளவில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா ஐந்தாவது பெரிய பொளுதார சக்தியாக விளங்குகிறது என பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது இருந்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஏசியன் பெயிண்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் நாட்டின் ஜி.டி.பி. (GDP) கணக்கெடுப்பில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு சரியாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
"ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி வருகிறது என்றே தெரியவில்லை. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் ஜி.டி.பி. மற்றும் துறைவாரியான வளர்ச்சி விகிதத்தில் முரண்பாடுகள் உள்ளன. தற்போதைய நிதியாண்டில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு மதிப்பற்ற ஒன்றாக இருப்பதாக நீங்கள் சொல்வது சரியானது தான். நானும் இன்று அப்படியே உணர்கிறேன். உண்மையில் ஜி.டி.பி. கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படுகிறது என்றே தெரியவில்லை."
"தற்போது பேசப்படும் ஜி.டி.பி. கணக்கெடுப்பு துறைவாரியாக ஒற்றுப் போகவில்லை. குறிப்பாக ஸ்டீல் மற்றும் சிமெண்ட் துறைகளில் ஜி.டி.பி. கணக்கெடுப்பில் அதிக முரண்கள் உள்ளன. ஸ்டீல், சிமென்ட் என முக்கியமான துறைகளின் உண்மையான ஜி.டி.பி. ஒட்டுமொத்த ஜி.டி.பி.யின் வளர்ச்சியில் எங்கும் ஒற்றுப்போகவில்லை," என்று தெரிவித்துள்ளார்.
ஏசியன் பெயின்ட்ஸ் அதிகாரியின் கருத்தை மேற்கோள் காட்டிய காங்கிரஸ் கட்சி, "ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற தகவல் போலி ஜி.டி.பி. தரவுகள் மூலம் வெளியிடப்பட்டுள்ளதா? அனைவரும் கூறிக் கொண்டு இருந்ததை ஏசியன் பெயின்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான அமித் சிங்கிள் உறுதிப்படுத்திவிட்டார்."
"அவர் ஜி.டி.பி. கணக்கெடுப்புக்கும் துறைவாரியான வளர்ச்சிக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. ஜி.டி.பி. கணக்கெடுப்பில் மிகப்பெரிய அளவில் முரண்பாடு இருப்பதாக தெரித்துள்ளார். இந்த தகவல்களை அவர் மே 9 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்," என்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.