இந்தியா (National)

இந்திய வான்பரப்பு பாதுகாப்பானது.. ஒரே வாரத்தில் 70 விமான வெடிகுண்டு மிரட்டல் குறித்து அரசு விளக்கம்

Published On 2024-10-20 08:16 GMT   |   Update On 2024-10-20 08:18 GMT
  • ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட விமானங்களுக்கு மிரட்டல்
  • நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் கடந்த ஓரே வாரத்தில் மட்டும் 70 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் (BCAS) டெல்லியில் வைத்து விமான நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த வாரம் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ, அகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், ஸ்டார் ஏர், அலையன்ஸ் ஏ உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. ஆனால் இதில் பெரும்பாலானவை வதந்தி ஆகும்.

குறிப்பாக நேற்று ஒரே நாளில் 30-க்கும் அதிகமான விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிரட்டல்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இயக்குநர் ஜூலிப்கர் ஹாசன், இந்திய வான்பரப்பு பாதுகாப்பனவை, பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. பயணிகள் எந்த பயமும் இன்றி விமான பயணங்களை மேற்கொள்ளலாம் என்று உறுதியளித்துள்ளார்.

Tags:    

Similar News