இந்தியா
null

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: ஐ.டி நிறுவனங்கள் கவனம் - எச்சரிக்கும் ZOHO ஸ்ரீதர்வேம்பு

Published On 2023-10-11 14:28 GMT   |   Update On 2023-10-11 14:43 GMT
  • போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.
  • எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்போதுள்ள நிலைமையை முற்றிலுமாக தலைகீழாக மாற்றிவிடும் என்று ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கருத்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தற்போதைய போர் காரணமாக மூன்று விதங்களில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார அடிப்படையில் பார்க்கும் போது, எண்ணெய் விலை திடீரென உயர்வை சந்திக்கும், இது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இரண்டாவதாக மத்திய கிழக்கில் எது நடந்தாலும், அது நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மூன்றாவது அன்னிய செலாவனியும் பாதிக்கப்படும்.

"மின்திறனை பொருத்தவரையில், நமக்கு புதுப்பிக்கத் தக்க மின்திறன் மட்டுமே தேவை. இதற்கான உள்கட்டமைப்புகளை நாம் மேம்படுத்த வேண்டும். நம்மிடம் அதிகளவில் திறமைமிக்கவர்கள் உள்ளனர். நமக்கு தேவையான ஒன்று திறமைமிக்கவர்களை சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்துவது மட்டும் தான். நமது தனியார் துறைகளில் இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று," என்று அவர் தெரிவித்து உள்ளார்.

"நமது மொத்த வருவாயில் பத்து சதவீதத்தை இந்தியா வழங்குகிறது, மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் இது இருமடங்கு அதிகரித்து, முன்னணி சந்தையாக மாறும். நமக்கு மெக்சிக்கோ மிகச்சிறப்பான சந்தையாக உள்ளது. மத்திய கிழக்கில் நாம் மிக வேகமாக வளர்ந்து வருகிறோம். தற்போது இந்த போர் காரணமாக மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்றே தெரியவில்லை. இதை கணிக்கவே முடியாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tags:    

Similar News