இந்தியா
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை 'புஷ்பக்'- வெற்றிகரமாக தரையிறக்கியது இஸ்ரோ
- விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டது.
- ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.
இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான புஷ்பக் இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 7 மணியளவில் இஸ்ரோவால் ராக்கெட் ஏவப்பட்டது.
இது ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.
இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பெட்டி அளவுருக்களை அடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.