இந்தியா

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குப்பதிவு

Published On 2024-09-18 01:34 GMT   |   Update On 2024-09-18 13:03 GMT
  • ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • வாக்காளர்கள் ஆர்வமாக காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகுதிகளுக்கும், ஜம்மு பிராந்தியத்தில் 8 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு தொடங்கி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

2024-09-18 12:24 GMT

ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-09-18 11:49 GMT

இங்கு ஜனநாயகம் இல்லாததால் அமைதியான முறையில் வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் அகமது மிர் தெரிவித்தார். 

2024-09-18 10:22 GMT

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 50.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2024-09-18 09:02 GMT

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

2024-09-18 06:33 GMT

24 சட்டமன்ற இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி நிலவரப்படி 26.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2024-09-18 06:06 GMT

அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாராவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சி.

2024-09-18 05:37 GMT

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களின் எண்ணம் வாக்குகளை பிரிப்பதுதான். மக்கள் அவர்களுடைய வாக்குகள் துண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும் என தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா வாக்களர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2024-09-18 04:21 GMT
24 தொகுதிகளில் காலை 9 வரை வரை தோராயமாக 11.11 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024-09-18 04:13 GMT

புல்வாமா சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆதரவு பெற்ற தலாத் மஜித் "நான் இன்று என்னுடைய வாக்கை பதிவு செய்துள்ளேன். ஜனநாயக வழியில் அனைத்து பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

எங்களிடம் இருந்து எதெல்லாம் பறிக்கப்பட்டதோ, அதையெல்லாம் ஜனநாயக வழியில் மட்டுமே திரும்ப பெற ஒரே வழி. ஜனநாயக நடைமுறையில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

2024-09-18 03:45 GMT

தொகுதி பிடிபி வேட்பாளர் வஹீத் பாரா கூறுகையில் "புல்வாமா களங்கம் அடைந்துள்ளது... புல்வாமாவின் இளைஞரான புல்வாமாவின் இமேஜை மீட்பதற்கான தேர்தல் இது. புல்வாமா மக்கள் மற்றும் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். இந்த தேர்தலில் மக்கள் வெளியே வந்து, ஜம்மு காஷ்மீரின் அமைதி, முன்னேற்றம் மற்றும் கவுரவத்திற்காக வாக்களிக்க வேண்டும்.

மக்கள் நடந்த 6 முதல் 7 வருடங்களாக ஏராளமானவற்றை இழந்துள்ளனர். ஆகவே மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள். இந்த வாக்கு இழந்ததை மீட்பதற்கானது." என்றார்.

Tags:    

Similar News